எக்கனாமிக் பிராஃபிட் (Economy Profit ) என்றால் என்ன ?

தொழில் சம்பந்தமாக உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவும் தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும் அமைக்கப்பட்ட பகுதி

Moderators: syberguyy, Vani

எக்கனாமிக் பிராஃபிட் (Economy Profit ) என்றால் என்ன ?

Postby deepthi.sen on Thu May 06, 2010 12:20 pm

எக்கனாமிக் பிராஃபிட் (Economy Profit ) என்றால் என்ன ?

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்கிடும் போது economy profit என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்களே ?.. இதை பற்றி சற்று விளக்க முடியுமா ?
deepthi.sen
 
Posts: 85
Joined: Sat Aug 09, 2008 8:23 pm


Marketlive.in Facebook Application

Marketlive.in Actress Gossips Actress gallery Techglimpse.com
Realtime charts Your Ad Here Your Ad Here Your Ad Here
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds


Re: எக்கனாமிக் பிராஃபிட் (Economy Profit ) என்றால் என்ன ?

Postby stockadvisor on Thu May 06, 2010 12:33 pm

எக்கனாமிக் பிராஃபிட் (Economy Profit ) என்றால் என்ன ?

ஒரு தொழிலின் வருமானத்தில் அந்த தொழிலுக்குண்டான செலவினங்கள் (Investment) போக மீதி உள்ள தொகையை லாபம் என்கிறோம். ஒரு தொழிலைச் செய்ய பயன்படுத்தும் முதலீட்டை அந்தத் தொழிலில் ஈடுபடுத்தாமல் வேறுவிதத்தில் உபயோகப்படுத்தியிருந்தால் நமக்கு ரிட்டர்ன் கிடைத்திருக்கும் எனக் கணக்கிட்டு (காஸ்ட் ஆஃப் கேப்பிட்டல்- Cost of Capital) தொழிலில் கிடைத்த லாபத்திலிருந்து அதைக் கழித்தால் வரும் தொகைதான் எக்கனாமிக் பிராஃபிட்.

உதாரணமாக ஒருவர் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்து தொழில் ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.... அதில் அவருக்கு 20,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதே சமயம் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் வங்கியில் ஃபிக்ஸ்ட்டில் போட்டிருந்தால் அவருக்கு வட்டி வருமானமாக 8,000 ரூபாய் கிடைத்திருக்கும். இந்த வட்டி வருமானத்தை தொழில் செய்து கிடைத்த லாபமான 12,000 ரூபாய்தான் எக்கனாமிக் லாபம். வட்டி வருமானத்துக்கும் கீழேதான் லாபம் கிடைத்தது என்றால். அந்த தொழிலை செய்வதற்குப் பதில் வங்கியில் போட்டுவிட்டு பேசாமல் இருந்து விடலாம். ஒரு நிறுவனத்தின் மதிப்பை எடை போடும்பொழுது வெறும் லாபத்தை கணக்கில் எடுக்காமல் எக்கனாமிக் பிராஃபிட்டை எடுத்துக் கொண்டு பார்த்து மதிப்பீடு செய்வதுதான் சரியாக இருக்கும்.

stockadvisor
 
Posts: 20
Joined: Mon May 03, 2010 10:30 am
   

Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds



Return to தொழில் சார்ந்த உரையாடல்

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron