by stockadvisor on Sun Jun 27, 2010 6:49 pm
ஏன் யூரோ வீழ்ச்சியடைந்து என்ற கேள்விக்கு பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது. அது 1999 யிலிருந்தே ஆரம்பித்த கதை. ஆம், அவ்வாண்டில்தான் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி யூரோ நாணயத்தை பயன்படுத்த ஏற்றுக்கொண்டன. அப்போது அவர்கள் முன்வைத்து ஏற்றுகொண்டது ஒரே ஒரு விதிதான். அதாவது யூரோ மதிப்பை பயன்படுத்தும் எந்த ஒரு நாடும் 3 சதவிகிததுக்கு மேல் தனது ஜி.டி.பி-யில் பற்றாக்குறை இருக்க கூடாது என்பதுதான். இதனை கடைபிடிக்காத நாடுகள்தான் கிரீஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின். இந்நாடுகளில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களால் யூரோவின் மதிப்பு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் காரணம். கிரீஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக யூரோவின் மதிப்பு குறைந்துள்ளது. அடுத்து லைனில் இருந்தும் நாடுகள்தான் போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள். இந்நாடுகளும் வீழ்ச்சியடையும் என்றால் யூரோவின் மதிப்பு நிச்சயம் அதிபாதாலத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. யூரோவின் மதிப்பு ஏற வேண்டும் என்றால்....இதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கிறது. ஒன்று பொருளாதார வீழ்ச்சி காணும் நாடுகளை யூரோவிலிருந்து நீக்குவது. இரண்டாவது பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் நாடுகள் யூரோவிலிருந்து விலகுவது. இப்போதே ஜெர்மனியில் இந்த கோரிக்கை வலுத்துள்ளது. இதில் எது நடந்தாலும் நமது பங்குச்சந்தை நிச்சயம் ஆட்டம் காணும்.