Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

வாரண்ட்ஸ (Warrants)

நான் பெங்களூரில் வசிக்கும் பொழுது ஒரு LG கலர் டி.வி வாங்கினேன். அப்போது அதனுடன் ஒரு வாரண்ட் கார்டு (Warrant card) கொடுத்தார்கள். அக்கார்டை பயன்படுத்தி ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு LG பொருளை வாங்கினால் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி கிடைக்குமென்று குறிப்பிட்டிருந்தார்கள். நானும் எதற்கு விட வேண்டுமென்று அவ்வாரண்ட்டை பயன்படுத்தி கொண்டேன். அது போலதான் பங்குச்சந்தை வாரண்ட்ஸ்.

நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் பொழுது, சில சமயங்களில் வாரண்ட்ஸ் கொடுப்பார்கள். அதாவது குறிப்பிட்ட காலத்திற்குள் அதே நிறுவனம் வெளியிடும் பங்குகளுக்கு சலுகை அறிவிப்பதாக குறிப்பிட்டிருப்பார்கள். நினைவிருக்கட்டும் இது போன்ற வாரண்ட்ஸ் சில நிறுவனங்கள் சில நேரங்களில் மட்டும் தான் கொடுப்பார்கள். மேலும் இது போன்ற சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் செல்லும்.

Follow Us on...