Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

ரிடர்ன் (Returns)

ரிலையன்ஸிக்கு (Reliance) சொந்தமான ரிலையன்ஸ் பவர் (Reliance Power), பங்குகள் வெளியிடுவதாக அறிவித்தார்கள். ரிலையன்ஸ் சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். பலரை கோடிகளில் புரள வைத்த நிறுவனம். நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தார்கள். சரி, என்று நானும் விண்ணப்பித்தேன். இறுதியில் எனக்கு பங்குகள் அலாட் ஆகவில்லை. ஆலாட் ஆகாதவர்களுக்கு கொடுத்த பணம் ரிடர்ன்ஸ்-ஆக திரும்ப கிடைக்கும்.

ரைட் சேர் அல்லது ரைட்ஸ் சேர் (Rights Share)

ஒரு நிறுவனத்தை பங்கு நிறுவனம் அல்லது பொது நிறுவனம் என்று எப்பொழுது அழைக்கிறோம ?.. ஒரு நிறுவனதிற்கு முதல் (Capital) ேவைப்படும் போது, அதனை திரட்ட பொதுமக்களுக்கு பங்குகள் வெளியிடுவார்கள் (Issue stocks). இதனால் அந்நிறுவனம் பங்கு நிறுவனமாகிறது. ஒரு நிறுவனத்தின் நிதி தேவையை அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பங்குதாரர்களே தீர்த்து வைக்கிறார்கள். இதனால், அந்நிறுவனத்தின் லாபம் நட்டங்களில் பங்குதாரர்களுக்கும் சம உரிமை (Rights) உண்டு. அதே போல் அந்நிறுவனம் மேலும் சில பங்குகளை வெளியிட்டால், அதிலும் பங்கு கேட்பதற்கு ஏற்கனவே பங்குதாரர்களாக உள்ளவர்களுக்கு உரிமை உண்டு. இதனை ரைட்ஸ் சேர் (Rights share) என்பார்கள். அதாவது தூய தமிழில் சொல்வதென்றால் உரிமை பங்குகள். இதற்கு Subscription rights என்றும் Subscription privilege என்றும் அழைக்கப்படும்.

இவ்வாறான உரிமை பங்குகளை பங்குதாரர்கள் வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளலாம் வேண்டாமென்றால் விட்டு விடலாம்.

சரி, யார் யாருக்கு எத்தனை பங்குகள் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தாக வேண்டுமல்லவ !. அதற்கு பங்குதாரர்கள் கூட்டம் ஒன்றை கூட்டி முடிவெடுப்பார்கள். நிறுவனம் தீர்மானிக்கும் எந்த ஒரு முடிவையும் பங்குதாரர்கள் ஒப்பு கொள்ள வேண்டும்.

ரெக்கார்ட் டேட் (தேதி) – Record Date

ரெக்கார்ட் தேதியை பங்குகளை வெளியிடும் நிறுவனமே நிர்ணயம் செய்வார்கள். இதனால் யாருக்கு டிவிடண்ட் (Dividend) மற்றும் கேப்பிடல் கேயின் (Capital gain) போன்றவைகள் வழங்க வேண்டும் என்று முடிவெடுக்க முடியும். அதாவது ஒரு பங்கினை வெளியிட்ட பிறகு அதனை ரெக்கார்ட் தேதி வரை விற்காமல் வைத்திருந்தால், அதற்குறிய டிவிடண்ட் மற்றும் கேப்பிடல் கேயின் வழங்குவோம் என்று கூறுவார்கள். இதனால் அத்தேதி வரை பங்குகளை விற்காமல் வைத்திருந்து அதற்கு மேல் பங்கை விற்றால் கூட அப்பங்குதாரர்க்கு டிவிடண்ட் கிடைக்கும். இதனை Date of Record என்றும் அழைப்பார்கள்.

High or Record High

அதாவது வார்த்தகத்தின் (Trading) ோது ஒரு பங்கு விற்க்கப்பட்ட அதிக பட்ச விலையே Record High என்பார்கள். இதனால் ஒரு சேர் வாங்குவதற்கு முன் அதன் Record High என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். அடிக்கடி Record High -யை தொடும் பங்குகளே முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.

Follow Us on...