Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

பிரீமியம் (Premium)

அட் பார் (At Par) என்றால் பங்குகளை முகப்பு விலைக்கே வெளியிடுவது. அவ்வாறு வெளியிடாமல் முகப்பு விலைக்கு மேல் அதிக விலை வைத்து வெளியிடுவது பிரீமியம் என்பார்கள். அதாவது பத்து ருபாய் பங்கை ஐநூறு ருபாய் விலைக்கு வெளியிடுவது. இதில் பத்து ருபாய் என்பது முகப்பு விலை, Rs. 490 பிரீமியம் விலையாகும்.

Promoters

ஒரு நிறுவனத்தை முதன் முதலாக தொடங்கும் போது முதல் போட்டு உருவாக்கியவர்களை promoters என்பார்கள். உதாரணத்திற்க்கு, அஜீம் பிரேம்ஜி முதல் போட்டு உருவாக்கிய நிறுவனமே விப்ரோ. இதனால் அஜீம் பிரேம்ஜி விப்ரோ (Wipro) நிறுவனத்தின் promoter ஆவார். பின்னர் அந்த நிறுவனம் பங்குச்சந்தை பட்டியலிடப்பட்டு (List) பொது நிறுவனம் ஆனது.

Promoter Holdings

ஒரு நிறுவனத்தின் Promoters-களிடம் மற்றும் அவர்களது உறவினர்களிடம் உள்ள மொத்த பங்குகளை Promoter Holdings என்பார்கள்.

பரி-பாசூ (Pari-Paasu)

பரி-பாசூ என்பது ஒரு லத்தீன் (Latin) ார்த்தை. அதாவது தமிழில் சொல்வதென்றால் சரிசமம். அதற்கு ஏன் லத்தீன் மொழி பெயர் என்றெல்லாம் கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு தெரியாது.

அதாவது ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகளுக்கும், தற்போது வெளியிடப்படும் பங்குகளுக்கும் உள்ள ரைட்ஸ் மற்றும் Privilege போன்றவைகள் சரிசமமாக இருந்தால் அதற்கு பெயர்தான் பரி-பாசூ என்பார்கள்.

பிரிஃபரன்ஸ் சேர் (Preferance Share)

ஈக்விட்டி சேர் (Equity share) கேள்விபட்டிருப்பீர்கள். அதில் சில நேரங்களில் டிவிடண்ட் (Dividend) கிடைக்கும், சில நேரங்களில் கிடைக்காது. அதற்கு எதிர்பதம் தான் பிரிஃபரன்ஸ் சேர். அதாவது பிரிஃபரன்ஸ் சேருக்கு கட்டாயம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு டிவிடண்ட் கொடுத்தாக வேண்டும்.

ஒரு நிறுவனம் நல்ல லாபம் சாம்பாதிக்கிறது என்றால் ஈக்விட்டி சேர் வாங்கியவருக்கு அதிக சதவிகித்தற்கு டிவிடண்ட் கிடைக்கும். ஆனால் பிரிஃபரன்ஸ் சேரில் அதே முன்பு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு தான் டிவிடண்ட் கொடுப்பார்கள்.

அதே போல், ஒரு நிறுவனம் நட்டத்தில் போய் கொண்டிருக்கிறது என்றால் ஈக்விட்டி சேருக்கு டிவிடண்ட் கிடைக்காது (கிடைக்கலாம், அதற்கெல்லாம் ரொம்ப பொறுமை வேண்டும்). ஆனால் பிரிஃபரன்ஸ் சேர் வாங்கியவருக்கு கட்டாயம் பணத்தை கொடுத்தாக வேண்டும்.

Follow Us on...