Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

டிபென்ச்சர்ஸ் (Debentures)

டிபென்ச்சர்ஸ் என்பது கடன் பத்திரங்கள்.

Going Long

ஒரு நிறுவனத்தின் Management எனப்படும் நிர்வாகம் நன்றாக இருக்கிறது, அதன் கடந்தகால செயல்பாடுகளும் நன்றாக இருக்கிறது, மேலும் அதன் உற்பத்தி திறனும் அதிகரிக்கும் என்று தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள், அந்த நிறுவனத்தின் பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்திருந்தால் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து, நீண்ட காலம் வைத்திருப்பீர்கள் அல்லவா…. அவ்வாறு செய்வதற்கு Going Long என்று பெயர்.

Going short

ஒரு நிறுவனத்தின் Management எனப்படும் நிர்வாகம் சரியா இயங்க வில்லை, அதன் கடந்தகால செயல்பாடுகளும் சரியில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள், அந்த நிறுவனத்தின் பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்திருந்தால் நிச்சயம் நட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என நினைத்து, உடனே அந்த பங்குகளை விற்று விட்டு வெளியேறுவீர்கள் அல்லவா.. இதற்குத்தான் Going short என்று பெயர்.

தலால் தெரு (Dalal Street)

இந்த தெருவில் தான் மும்பை பங்குச்சந்தை அமைந்துள்ளது.

டே ஆடர் (Day Order)

நீங்கள் பங்குகளை வாங்க அல்லது விற்க, உங்கள் ஆன்லைன் புரோக்கர் (Online Broker) மூலம் ஆடர் (Order) செய்ய வேண்டும். நீங்கள் செய்த ஆடரின் மீது வர்த்தகம் (Trading) அன்றே நடை பெற்றாக வேண்டும், இல்லையென்றால் அது காலம் கடந்து Expire ஆகி விடும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பங்கை விற்க ஆடர் செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்த ஆடர் மீது அன்றே வர்த்தகம் நடைபெற்று பங்கை விற்றாக வேண்டும், இலையென்றால் அந்த பங்கு உங்களிடமே தங்கி விடும். இதற்கு பெயர் தான் Day Order என்பார்கள்.

Default

ஒரு நிறுவனம் வாங்கப்பட்ட கடனுக்கான (Debt) வட்டி (interest) அல்லது முதல்-லை (Principal) சரியான நேரத்தில் திருப்பி கட்டாவிட்டால், அதற்கு பெயர் தான் Default என்பார்கள்.

Follow Us on...