Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

Bid(பிட்)

பங்கை வாங்குவதற்கு முதலீட்டாளர் அளிக்கவிருக்கும் அதிகபட்ச தொகை

புக் பில்டிங் பிராசஸ் (Book building process)

ஒரு நிறுவனம் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிடும் பொழுது அதற்கு ஒரு விலையை நிர்ணயம் செய்தாக வேண்டும். விலையை இரண்டு வழிகளில் நிர்ணயம் செய்யலாம்.

ஒன்று, பங்குகளை வெளியிடும் பொழுது அதற்கு ஒரு விலையை நிறுவனமே நிர்ணயம் செய்து வெளியிடுவார்கள். இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் விலை முகப்பு விலையை விட சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். விருப்பமுள்ளவர்கள் வாங்குவார்கள், இல்லாதவர்கள் சரி இப்போ விட்டு விடுவோம் பின்பு பார்போம் என்று கூறிவிட்டு வேறு வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.

இரண்டாவது முறையில், நிறுவனம் வெளியிடும் பங்கிற்கு குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என்று இரு விலைகளை நிர்ணயம் செய்து வெளியிடுவார்கள். ஆதாவது ஆங்கிலத்தில் இதற்கு புளோர் (Floor) மற்றும் சீலிங் (Ceiling) என்று சொல்வார்கள்.

நீங்கள் சிறு வயதில் ஏலம் விடுவதை பார்த்திருப்பீர்கள், ஏலம் விடுபவர் குறைந்தபட்ச விலையை சொல்லி ஏலத்தை தொடங்கி வைப்பார். உடனே ஏலம் எடுப்பவர்கள் கூவ ஆரம்பிப்பார்கள். அதுபோலதான் இங்கேயும். பங்குகளை வாங்க நினைக்கும் நிறுவனங்களோ அல்லது முதலீட்டாளர்களோ குறைந்தபட்ச விலையிலிருந்து அதிகபட்ச விலைக்குள் ஒரு விலையை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு கூவுவார்கள் (மன்னிக்கவும் விண்ணப்பிப்பார்கள்). ஏலம் முடிந்த பிறகு வந்துள்ள விண்ணப்பங்களை பார்த்து நிறுவனமே ஒரு விலை நிர்ணயம் செய்ய முடிவெடுப்பார்கள். இப்படி எடுக்கப்படும் முடிவே புக் பில்டிங் பிராசஸ் (Book building process) ஆகும்.

பேஸிஸ் ஆப் அலாட்மெண்ட் (Basis of Allotment)

உதாரணத்திற்கு இன்போஸிஸ் நிறுவனத்தை (Infosys Technologies) எடுத்துக்கொள்வோம். இன்போஸிஸ் பத்து கோடி ருபாய்க்கு பங்குகள் வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் வந்து சேர்ந்துள்ள விண்ணப்பங்களின் மதிப்பு இருபது கோடி ருபாய் என்றால், யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தாக வேண்டும்.

சில நிறுவனங்கள் குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்வார்கள். இம்முறையால் சிலருக்கு கிடைக்கும், சிலருக்கு கிடைக்காது.

இரண்டாவது முறையில், அனைவருக்கும் பங்குகளை பகிர்ந்தளிக்க முடிவெடுப்பார்கள். ஆனால் நூறு பங்குகள் கேட்டவருக்கு ஐம்பதும், பத்து கேட்டவருக்கு ஐந்து என்றுதான் கிடைக்கும். இதற்கு பெயர் தான் பேஸிஸ் ஆப் அலாடமெண்ட். பங்குகளை அலாட் செய்வதற்கு முன், அதனை வெளியிடும் நிறுவனம் பேஸிஸ் ஆப் அலாட்மெண்ட்-யை தயாரித்து செ.பி-யிடம் (SEBI) சமர்ப்பிக்க வேண்டும். செ.பி-யின் அறிவுரையின் பேரிலே அதை நடைமுறைப் படுத்த வேண்டும். தேவைப்பட்டால் செ.பி-யின் அறிவுரையின் பேரில் மாற்றியமைக்க வேண்டும்.

புளூ சிப் (Blue Chip)

உலகில் நிறைய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் தான் உலகரிந்தவை. அப்படிபட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் தயாரிப்புகளுக்கு ஏகப்பட்ட மவுசு உண்டு. அப்படிப்பட்ட நிறுவனங்கள் தான் புளூ சிப் என்பார்கள். முதலீட்டாளர்கள் புளூ சிப் பங்குகளை உன்னிப்பாக கவனிப்பார்கள். விலை ஏறினாலும் சரி இறங்கினாலும் சரி முதலில், புளூ சிப் பங்குகளையே பாதிக்கும்.

அதெல்லாம் சரி, அதென்ன புளூ சிப் என்கிறீர்கள ?புளூ சிப் என்பது போக்கர் (Poker) என்ற விளையாட்டிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தை.

பை (Buy)

பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து இந்த பங்குகளை வாங்கலாம் என்று நிபுணர்கள் (Experts) கனிப்பார்கள். இதை பை என்பார்கள். பை என்றால் வாங்குவது. இது வெறும் கனிப்புதான், சில நேரங்களில் இந்த கனிப்பு தவறாக முடியலாம்.

லார்ஜ் கேப் அல்லது பிக் கேப் (Large Cap or Big Cap)

சந்தையில் அதிக Market Capitalisation கொண்ட நிறுவனங்களை லார்ஜ் கேப் (Large Cap) என்பார்கள்.

போனஸ் சேர் (Bonus Share)

ஓரு நிறுவனம் லாபம் சம்பாதிக்கும் போது, அந்த லாபத்தை தனது பங்கு தாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த லாபத்தை பணமாக தராமல் பங்குகளாக கொடுக்கும்.

உதாரணமாக ஒரு சேர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சேர் போனஸ் என அல்லது இரண்டிற்கு ஒன்று என்று அறிவிக்கும்.

Backend Load

நாம் Mutual Funds யூனிட் எனப்படும் அலகுகளை விற்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக எடுத்துக்கொள்வார்கள். இதை தான் Backend Load என்பார்கள்.

Balance Sheet

ஒரு நிறுவனதின் மொத்த சொத்து மதிப்பு மற்றும் அவர்கள் பெற்றுள்ள கடன் ஆகியவற்றை கொண்ட Statement-யை Balance sheet என்பார்கள். பேச்ச வழக்கில் சொல்லப்போனால் ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கொண்ட கோப்பு. இதை ஒவ்வொரு காலாண்டிற்கும் (Every Quaterly) வெளியிடுவார்கள்.

பேர் மார்க்கெட் (Bear Market)

பங்குச்சந்தை குறியீடுகள் வீழச்சி அடைந்து வாங்குவோர் திறன் குறைந்து, விற்பவர்கள் அதிகமாகும் போது பேர் மார்க்கெட்யின் கை ஓங்கும். பேர் மார்க்கெட்டின் போது பங்குகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். ஆக பங்குகள் வாங்க இது சரியான நேரம். நான் சொல்வது நல்ல பங்குகள். அதாவது பிற்காலத்தில் விலை ஏறும் என நம்பிக்கை தரக்கூடிய பங்குகள்.

புரோக்கர் (Broker)

அய்ய !! கொஞ்சம் பொறுங்கள், நான் சொல்லப்போவது பங்குச்சந்தை புரோக்கரை பற்றி. நீங்கள் பங்குகள் வாங்க அல்லது விற்க வேண்டும் என்றால் இவரை தான் அனுக வேண்டும். சும்மா செய்ய மாட்டார், ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமான கொடுக்க வேண்டும். ICICI Direct போன்ற ஆன்லைன் புரோக்கர்களும் உண்டு.

BSE சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டெண்.

புல் மார்க்கெட் (Bull Market)

பங்குகள் வாங்குவோர் திறன் அதிகமாகி விற்பவர்கள் திறன் குறைந்து காணப்படும் பொழுது புல் மார்க்கெட் கை ஓங்கும்.

Follow Us on...