Stock Tips - Last 5 days

   

Mutual Fund NAV - All Funds

Stock Advice - Click here for Free Tips from Experts    
Show/Hide

அலாட்மெண்ட் (Allotment)

ஒரு நிறுவனத்தின் பங்குகள் வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம்?. நம்மால் முடிந்த தொகைக்கு ஏற்ப சில பங்குகளை கோரி விண்ணப்பம் செய்வோம். அவ்வாறு விண்ணப்பம் செய்யப்பட்டு இறுதியில் நமக்கு கிடைக்கும் பங்குகளே அலாட்மெண்ட் என்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் நமக்கு அலாட் செய்யப்பட்ட பங்குகள் என்று அர்த்தம். இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், சில நேரங்களில் நாம் நூறு பங்குகள் கோரினால் அனைத்துமே கிடைக்காது. ஐம்பது கிடைக்கலாம், இருபது கிடைக்கலாம், ஏன் கிடைக்காமலும் கூட போகலாம். ஆக, இறுதியில் நமக்கு கிடைக்கும் பங்குகளே அலாட்மெண்ட் ஆகும்.

அட் பார் (At Par)

ஒரு நிறுவனம் தனது பங்குகளை முகப்பு விலைக்கே வெளியிடுவது அட் பார் என்பார்கள். உதாரணத்திற்கு பத்து ருபாய் பங்கு பத்து ருபாய் விலைக்கே வெளியிடுவது.

அட் டிஸ்கவுண்ட் (At Discount)

நிறுவனங்கள் பங்குகளை வெளியிடும் பொழுது நிர்ணயிக்கும் விலை மூன்று விதங்களில் அமையும். ஒன்று பங்கின் அதே விலைக்கு வெளியிடுவது. அதாவது பத்து ருபாய் பங்கு பத்து ருபாய் விலைக்கே வெளியிடுவது. இதை அட் பார் என்பார்கள். இரண்டாவது பிரீமியம் விலைக்கு. அதாவது சந்தை விலை காட்டிலும் சற்று அதிக விலைக்கு வெளியிடுவது. உதாரணமாக, பத்து ருபாய் பங்கின் விலை ஐநூறு ருபாய் என்று. மூன்றாவது டிஸ்கவுண்ட் விலைக்கு. உதாரணமாக தீபாவளி பண்டிகை நாட்களில் வியாபாரிகள் மக்களை கவர டிஸ்கவுண்ட் கொடுப்பார்களே அதே போலதான். நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் பங்குகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள். அதாவது பத்து ருபாய் பங்கின் விலை எட்டு ருபாய் என்று. இதை அட் டிஸ்கவுண்ட் என்பார்கள்.

AUM

AUM என்பது Assets Under Management என்பதன் சுருக்கம். அசட்ஸ் என்றால் சொத்து. அதாவது முதலீட்டாளர்களின் சார்பில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் (உதாரணமாக Mutual funds) ொத்த சந்தை மதிப்பே AUM என்பார்கள்.

Accumulative

பங்குச்சந்தைக்கு புதியவர்கள் செய்ய வேண்டியது இந்த Accumulating தான். அதாவது நிபுணர்களின் ஆலோசனைப்படி ஒரு நல்ல பங்கை தேர்ந்தெடுப்பது. பிறகு நம்மிடமுள்ள பணத்தை முழுவதுமாக முதலீடு செய்யாமல் சந்தையின் ஏற்ற இறக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வாங்க வேண்டும். இம்முறைக்கு பெயர் தான் Accumulating என்பார்கள். இவ்வாறு செய்வதின் மூலம் ஓரளவு நட்டமாகாமல் தப்பிக்கலாம்.

Analysts (நிபுணர்கள்)

பங்குச்சந்தையை பற்றி நன்கு தெரிந்தவர்கள். அதாவது பங்குச்சந்தை முதலீடுகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து தனது பரிந்துரைகளை முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பார்கள். இப்பொழுது பங்குகளை வாங்கலாம், விற்கலாம் போன்ற பரிந்துரைகள். பொதுவாக இது போன்ற நிபுணர்கள் ஒரு குறிப்பிட் sector-ரில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். என்ன தான் நிபுணர்கள் கனித்தாலும், நம் முதலீடுகள் பற்றி நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

Appreciation

நீங்கள் செய்த ஒரு முதலீடு முன்னேற்றம் கண்டுள்ளது என்றால் அது தான் appreciation. உதாரணமாக, நீங்கள் பத்து ருபாய்க்கு வாங்கிய இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு ஐம்பது ருபாய் விலை உயர்துள்ளது என்றால் அது தான் appreciation.

Approved List

வீட்டு மனை, நிலம், தங்கம் போன்றவற்றின் மீது வங்கியில் லோன் (Loan) வாங்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் நீங்கள் வைத்துள்ள பங்குகள் மீது வங்கியில் லோன் தருவார்கள். ஆனால் நீங்கள் வைத்திருக்கும் பங்கு approved list-யில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த லிஸ்டில் எந்தெந்த பங்குகளின் பேரில் கடன் கொடுக்கப்படும் என விளக்கப்பட்டிருக்கும்.

Arbitage

ஒரு சந்தையில் வாங்கிய பங்கை வேறு சந்தையில் விற்றால், அதற்கு பெயர் தான் arbitage.

Follow Us on...