Disclaimer & Disclosure: All the recommendations and views expressed here are of the persons/institutions who have recommended them respectively. It is also safe to assume that these persons/institutions might have recommended these to their clients. Pangusanthai.com does not verify nor hold any responsibility for the above recommendations. Use this information at your own risk. Neither the BSE nor the NSE can be held responsible in any way for any information pertained here.
மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் யாவை? (Types of Mutual funds)
குரோத் ஃபண்ட் எனப்படும் வளர்ச்சி நிதிகள்.(Growth funds)
இன்கம் ஃபண்ட் எனப்படும் வருமான நிதிகள். (Income funds)
பேலன்ஸ் ஃபண்ட் எனப்படும் சமநிலை நிதிகள். (Balanced funds)
கில்ட் ஃபண்ட்ஸ். (Gilt funds)
இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ். (Index funds)
மியூச்சுவல் ஃபண்ட் பிளான்கள் யாவை ? (What are the mutual fund plans?)
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் பிளான்கள் மூன்று வகைப்படும்.
·டிவிடண்ட் பிளான் (Dividend Plan) : இந்த வகை மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களில், முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டிவிடண்ட் அறிவிப்பார்கள்.
·ரீ-இன்வஸ்ட்மெண்ட் பிளான் (Re-investment plan) : இந்த வகை பிளான்களில், டிவிடண்ட் முதலீட்டாளர் கைக்கு கிடைக்காமல் மீண்டும் முதலீடு செய்யப்படும்.
·குரோத் (Growth) : இந்த வகை பிளான்களில், டிவிடண்ட் எல்லாம் கிடையாது (No dividend). முதலீட்டாளர் செய்த முதலீட்டுக்கு, பிளானின் அப்போதைய NAV-யை பொறுத்து கேப்பிட்டல் (capital)மற்றும் லாபம் (profit) கிடைக்கும்.
ஓபன் என்டட் மற்றும் குலோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ? (What are open ended & closed ended mutual funds?)
ஓபன் என்டட் மியூச்சுவல்ஃபண்ட்-யில் (Open ended mutual funds), இவற்றின் யூனிட்களை (units)முதலீட்டாளர் எப்போது வேண்டுமானலும் வாங்கலாம், அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதனை லிக்விடிட்டி (Liquidity) என்று அழைக்கப்படும். இதற்கு கட்டணமாக நம்மிடமிருந்து ஒரு தொகை அப்போதைய பிளானின் NAV-யைகொண்டுகணக்கிட்டு எடுத்துக்கொள்வார்கள்.
குளோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் (Closed ended mutual funds), இது உங்கள் ஏறியாவில் நடக்கும் சீட்டு போல, ஒரு குறிப்பிட்ட கால்த்திற்கு மட்டுமே கிடைக்கும். பொதுவாக ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு நடத்துவார்கள்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வருமான வரி விலக்கு பெற முடியுமா?
ஆமாம். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களுக்கு, வருமான வரி விலக்கு உண்டு (Income tax rebate). இப்பிளான்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில், இருபது சதவிகித்திற்கு(20%) இன்கம் டாக்ஸ் ஆக்ட் (Income Tax Act)-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.