Disclaimer & Disclosure: All the recommendations and views expressed here are of the persons/institutions who have recommended them respectively. It is also safe to assume that these persons/institutions might have recommended these to their clients. Pangusanthai.com does not verify nor hold any responsibility for the above recommendations. Use this information at your own risk. Neither the BSE nor the NSE can be held responsible in any way for any information pertained here.
பங்குச்சந்தையில் நடைபெறும் எந்த ஒரு பங்கு பரிவர்த்தனை (Transactions) அதற்கெனவே இருக்கும் பங்குச்சந்தை தரகர்கள் மூலம் தான் நடைபெறும். நாம் சந்தையில் டிரேடிங் செய்ய வேண்டும் என்றால், இந்த தரகர்களிடம் தான் செல்ல வேண்டும். பொதுவாக தரகர்கள் பெரிய முதலீட்டாளர்களை தான் அதிகம் விரும்புவார்கள், பல நேரங்களில் சிறிய முதலீட்டாளர்களை அவர்கள் விரும்புவதில்லை. அத்தகைய தரகர்கள் தங்களுக்கென நிறைய சப்-புரோக்கர்கள் வைத்து கொள்வார்கள். ஆக, பெறும்பாலும் சிறு முதலீட்டாளர்கள், இந்த சப்-புரோக்கர்களை தான் அனுக வேண்டும். இந்த சப்-புரோக்கர்கள் (Sub-brokers) தங்கள் புரோக்கர்களிடம் டிரேடிங் ஆடர்களை கொடுப்பார்கள். ஆக, இறுதியில் சந்தையில் உள்ள அந்த மெயின் தரகர்தான் காய் நகர்த்துவார்.
இவ்வாறு நாம் வாங்க-விற்க நினைக்கும் எந்த ஒரு பங்கையும் (Share) நமது புரோக்கர்தான் செய்தாக வேண்டும். ஆகையால், நாம் தேர்ந்தெடுக்கும் புரோக்கர் நம்பிக்கையானவராக இருப்பது மிக முக்கியம். அப்படி நம்பிக்கையான, சந்தை சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி காய் நகர்த்த கூடிய புரோக்கரை தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம். சரி, சந்தை புரோக்கரை தேர்ந்தெடுக்கும் பொழுது முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்,
செ.பி வகுத்துள்ள விதி முறைப்படி முதலீட்டாளர் செய்ய வேண்டியவை,
செ.பி-யின் அங்கிகாரம் பெற்ற தரகர்கள்/துணை தரகர்களிடம் மட்டுமே உதவியை நாட வேண்டும்.
முதலீட்டாளர்கள் தரகர்கள்/துணை தரகர்களிடம் செ.பி-யால் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ் உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அப்படி அங்கிகரிக்கப்பட்ட தரகர்கள் சந்தையில் டிரேடிங் செய்ய அனுமதி உள்ளவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
டிரேடிங் விதி முறைகளை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்ட பின், அதனை Agreement செய்து கொள்ளவும்.
தினமும் நடைபெறுகின்ற வர்த்தகத்தின் contract note/ confirmation memo ஆகியவற்றை கேட்டு பெற்றுக்கொள்ளவும்.
ஒவ்வொரு Settlement -டின் பில்லை கேட்டு பெற்றுக்கொள்ளவும்.
நீங்கள் பெறும் contract note-யில் தரகரின் பெயர் (Name of the broker), வர்த்தகம் செய்யப்பட்ட நேரம் (Traded time), எந்த விலைக்கு வர்த்தகம் செய்யப்பட்டது (Traded price), வர்த்தகம் செய்யப்பட்டதற்கான அடையாள (Trade/Transaction no.) எண் மற்றும் புரோக்கரேஜ் ஆகியவை தெளிவாக குறிப்பிட்டுள்ளதா என்று சரி பார்த்துகொள்ள வேண்டும்.
தேவையான பொழுது Account statement பெற்று கணக்கை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
உங்கள் புரோக்கரின் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றால், உடனே உங்கள் புரோக்கர் பதிவு செய்துள்ள பங்குச்சந்தைக்கு எழுத்து மூலமாக complaint கொடுக்க வேண்டும்.